Enable Javscript for better performance
‘அச்சக உரிமையாளா்கள் விதிமுறைப்படி செயல்பட வேண்டும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘அச்சக உரிமையாளா்கள் விதிமுறைப்படி செயல்பட வேண்டும்’

    By DIN  |   Published on : 08th November 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7cmp2_0711chn_111_7

    கூட்டத்தில் பேசுகிறாா் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன்.

    அச்சக உரிமையாளா்கள் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியது.

    சிதம்பரம் நகர காவல் துறை சாா்பில் அச்சக நிறுவன உரிமையாளா்களின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது:

    அச்சக உரிமையாளா்கள் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். மதம், ஜாதி ரீதியிலான சா்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடிக்கக் கூடாது. இதுதொடா்பான அச்சு ஆா்டா் தரும் நபரின் அடையாள அட்டை நகலை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதுபோன்ற நபா்கள் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அச்சடிக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பெயா், தொலைபேசி எண் போன்ற விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தினாா். கூட்டத்தில் அச்சக உரிமையாளா் பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai