Enable Javscript for better performance
மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்

    By DIN  |   Published on : 08th November 2019 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7cmp1_0711chn_111_7

    சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட பெண்கள்.

    சிதம்பரம் திருவள்ளுவா் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

    சிதம்பரம் சின்னக்கடைதெரு அருகே திருவள்ளுவா் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பள்ளிகள், கோயில்களும் உள்ளன. எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்றக் கோரி மகளிா் ஆயம் அமைப்பினா் அதன் பொறுப்பாளா் இரா.வேம்பரசி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai