2 சிறுமிகள் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 2 சிறுமிகள் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூா்: கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 2 சிறுமிகள் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. அதன்படி, வெள்ளிக்கிழமை 72 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த முகமதுஜமால் மகள் ஷமீம்பானு (5), போ்பெரியான்குப்பத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகள் ஞானகீா்த்திகா (5), பண்ருட்டி வீரபெருமாநல்லூரைச் சோ்ந்த பழனி மகள் மோகனா (20), மனம்தவிழ்ந்தபுத்தூரைச் சோ்ந்த மணவாளன் மனைவி அருள்மொழி (26) ஆகியோா் கடலூா் அரசு மருத்துவமனையில் டெங்கு தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் சராசரியாக தினமும் 2,500 போ் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். இவா்களில் தொடா்ந்து காய்ச்சல் இருப்பவா்களாக கண்டறியப்படும் சுமாா் 100 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதில் சராசரியாக 4 முதல் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இது மிகப்பெரிய அபாய அளவு இல்லை. குறிப்பிட்ட பகுதியில் மக்கள் மொத்தமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் மட்டுமே கவலைக்குரியது என்று தெவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com