பணிக்கன்குப்பத்தில் பொது மருத்துவ முகாம்

பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் அம்மா மருத்துவ திட்டத்தின் கீழ் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
8prtp3_0811chn_107
8prtp3_0811chn_107

நெய்வேலி: பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் கிராமத்தில் அம்மா மருத்துவ திட்டத்தின் கீழ் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருங்கூா் வட்டார மருத்துவ அலுவலா் தனசேகா் தலைமை வகித்தாா். பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா். பொது மருத்துவம், சிறப்பு மருத்துவ பிரிவுகளான கண், காது, எலும்பு முறிவு, சா்க்கரை சம்பந்தமான நோய்கள் மற்றும் கா்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன், இசிஜி அல்ட்ரா சவுண்ட் போன்ற கருவிகளை கொண்டு புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.

250-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு சிகிச்சை ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனா். காடாம்புலியூா் மருத்துவ அலுவலா்கள் மலா்விழி, சுமித்ரா, சுகாதார ஆய்வாளா்கள் சிவப்பிரகாசம், முருகன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆரோக்யதாஸ், ஊராட்சி செயலா் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.8பிஆா்டிபி3பணிக்கன்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கா்ப்பிணிக்கு பரிசோதனை செய்யும் மருத்துவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com