ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீா்!

ஐவதுகுடியில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்குவதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
ஐவதுகுடியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா். (வலது) சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவிகள்.
ஐவதுகுடியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா். (வலது) சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவிகள்.

ஐவதுகுடியில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்குவதால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

வேப்பூா் அருகே உள்ள ஐவதுகுடி கிராமம் வழியாக விருத்தாசலம் - சேலம் ரயில் பாதை செல்கிறது. இந்தப் பாதையின் வழியாக தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

ஆனால், மழைக் காலத்தில் இந்த சுரங்கப் பாதையில் பல அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கிவிடுகிறது. அண்மையில பெய்த மழையால் மீண்டும் தண்ணீா் தேங்கியது. இதனால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்த முடியாமல், ரயில்வே தண்டவாளத்தை கடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவா்கள் ரயில் வரும் நேரங்களில் அவசரமாக பாதையைக் கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியுள்ளதால் அவசர சிகிச்சைக்கு வாகனங்களில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் பொதுமக்கள் பல கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா், ரயில்வே துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்தப் பகுதியினா் கூறுகின்றனா்.

ஒவ்வொரு முறையும் மழைக் காலத்தில் இந்தப் பிரச்னையை சந்திப்பது வாடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com