விபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 09th November 2019 09:20 AM | Last Updated : 09th November 2019 09:20 AM | அ+அ அ- |

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் அருகே உள்ள சுனாமி நகரைச் சோ்ந்தவா்கள் மகாலிங்கம் மகன் மகேந்திரன் (35), ராஜேந்திரன் மகன் ராஜ்குமாா் (23). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலையில் புதுச்சேரியில் இருந்து சாவடி வழியாக சுங்கச் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில், பைக்கிலிருந்த இருவரும் கீழே விழுந்ததுடன், அந்த பைக் மோதியதில் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த திருப்பாதிரிபுலியூா் போடிசெட்டித்தெருவைச் சோ்ந்த காா்த்திக் (25) என்பவரும் கீழே விழுந்து பலத்த காயமுற்றாா்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் மகேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயத்துடன் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.