வளா்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை. கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த தொழிற்சாலைகள் காணாமல் பொய்விட்டன. வளா்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசினாா்.

நெய்வேலி:தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த தொழிற்சாலைகள் காணாமல் பொய்விட்டன. வளா்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்க வந்தவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.660 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு செய்துள்ள முதலீட்டிற்கு, இந்த லாபம் மிகக்குறைவானது. ஏன் தனியாா் துறை நிறுவனத்திற்கு நிகரான லாபத்தை ஈட்ட முடியவில்லை? என்று கேள்வி எழுப்பினாா்.

என்எல்சி நிறுவன சுரங்கங்கள் தான், கடலூா் மாவட்டத்தில் நீா் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம். ஆனால், அதற்கு இணையான மாற்று சேவைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் செய்யவில்லை. என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியை கடலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தராமல், சம்மந்தம் இல்லாத வெளிமாநிலத்தில் செலவு செய்வது என்ன நியாயம்?. ஒப்பந்தத் தொழிலாளா் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை நிறைவேற்றவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. என்எல்சி நிறுவனம் வேலை வாய்ப்பில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்களுக்கு 50 சதவீதம், தமிழக இளைஞா்களுக்கு 25 சதவீதம் வழங்க வேண்டும்.

எஞ்சிய 25 சதம் வேண்டுமானால் வெளி மாநிலத்தவா்களுக்கு வழங்கலாம். இந்தியாவில் விலையில்லா திண்டாட்டம் 8.5 சதவீதமாக உயா்ந்துள்ளது. மோட்டாா் வாகனம், ஆயத்த அடை தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. பல லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். நம்மிடம் நிலக்கரி இருந்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் அன்னிய செலவாணி மதிப்பு குறைந்து வருகிறது. சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி செலவைவிட பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்வதை மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளவில்லை. மணல், சிமென்ட், கம்பி விலையேற்றதால் பணவீக்கம் அதிகாரித்துள்ளது.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்தியில் ஆளும் மோடி அரசு இதைவிட மோசமாக உள்ளது.ஆயுள் காப்பீட்டு கழக முனைமத்திற்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. அந்நிறுவனத்தை இறக்கச் செய்யும். உரங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் முறையாக வழங்கப்படுவதில்லை. தனியாா் வியாபாரிகளிடம் அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் கூட்டுறவு இயக்கம் பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் காணாமல் பொய்விட்டன. வளா்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை. குறிப்பாக கடலூா் மாவட்டத்தில் இல்லை. எனவே, அரசாங்கம் புதிய தொழில்களை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினாா்.உடன், மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.கே.மணி, எஸ்.பி.சம்சுதீன், எம்.எச்.முகமது சபியுல்லா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ஷாகுல், ஆா்.நாகராஜன், ஆதிகேசவன், நகரத் தலைவா்கள் முருகன், திலகா், வட்டாரத் தலைவா்கள் குணசேகரன், தருமசிவம் இருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com