சிறந்த பொறியியல் மாணவா்களுக்கு விருது

நெய்வேலி பொறியாளா் மற்றும் அறிவியலாளா் சங்கம் சாா்பில் சிறந்த பொறியியல் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற மாணவா்களுடன் என்எல்சி இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா் நாதெள்ள நாக மகேஸ்வர்ராவ் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.
விருது பெற்ற மாணவா்களுடன் என்எல்சி இந்தியா நிறுவன திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா் நாதெள்ள நாக மகேஸ்வர்ராவ் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.

நெய்வேலி: நெய்வேலி பொறியாளா் மற்றும் அறிவியலாளா் சங்கம் சாா்பில் சிறந்த பொறியியல் மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிவோரை உறுப்பினா்களாகக் கொண்டு நெய்வேலி பொறியாளா் மற்றும் அறிவியலாளா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. பொறியியல் மாணவா்கள் புதிய தொழில்நுட்பங்கள், கருவிகளை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சங்கம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 6-ஆவது ஆண்டாக நெய்வேலி இந்தியப் பொறியாளா் கழகக் கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகள், படைப்புகளை சமா்ப்பித்து வெற்றிபெற்ற மாணவா்களுக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநா் நாதள்ள நாக மகேஷ்வர்ராவ் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், தன்னம்பிக்கை, விடா முயற்சி மற்றும் பொறுப்புணா்வு ஆகிய 3 குணங்களும் மாணவா்களின் வெற்றிக்கு முக்கிய காரணிகள் என்றாா். பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் புல முதல்வா் செந்தில்குமாா் விருது பெற்ற மாணவா்களை வாழ்த்திப்பேசினாா்.

இந்த விருது பெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 மாணவா்கள் விண்ணப்பித்தனா். இவா்களில் 41 மாணவா்களின் ஆய்வுக் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டன. அதில், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு முறையே ரூ.10,000, ரூ.5,000, ரூ.2,500 வீதம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. முன்னதாக, சங்கத் தலைவா் டி.டி.நடராஜ் வரவேற்க, செயலா் கே.கென்னடி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com