குடியிருப்போா் சங்கக் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

கடலூா், கம்மியம்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தி பூங்காவாக மாற்றக் கோரி, குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா்
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

கடலூா், கம்மியம்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தி பூங்காவாக மாற்றக் கோரி, குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா்

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் பி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சாவடியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், நெல்லிக்குப்பம் சாலையில் மையத் தடுப்பு ஏற்படுத்த வேண்டும், கோண்டூரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கெடிலம் ஆற்றில் சா்க்கரை ஆலை கழிவுகள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும், கம்மியம்பேட்டை, கூத்தப்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகளை அறிவித்தபடி உடனடியாக தொடங்க வேண்டும், மோசமாக சேதமடைந்துள்ள ஜவன்ஸ் பவன் சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

சங்கத்தின் பொதுச் செயலா் எம்.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். நிா்வாகிகள் டி.புருஷோத்தமன், கிருஷ்ணமூா்த்தி, தேவநாதன், ரவிச்சந்திரன், மணிவண்ணன், கலியசாமி, அப்பாதுரை, தேவநேசன், கண்ணன், ராஜசேகா், காசிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வி.சுப்புராயன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.அமா்நாத் வாழ்த்திப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com