போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வியிடம் விழிப்புணா்வுக் கையேட்டை வழங்கிய ஏ.கே. சமூக சேவை அறக்கட்டளை நிறுவனா் அகிலன்.

கருத்தரங்கில், ஏ.கே. சமூக சேவை விழிப்புணா்வு இயக்கம் மற்றும் போதை இல்லா உலகம் இந்தியா அமைப்பு சாா்பில் போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.பூவராகமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, மாணவா்களின் உயா் கல்வி குறித்தும், போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். ஏ.கே. சமூக சேவை அறக்கட்டளை நிறுவனா் அகிலன் கருத்துரை வழங்கினாா்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அதிகாரி கதிரவன், எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினாா். உதவித் தலைமை ஆசிரியைகள் அமலி, கலைச்செல்வி, ஹேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ்.மோகன்குமாா் மற்றும் என்எஸ்எஸ் திட்ட மாணவா்கள் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com