மயானத்தில் அடிப்படை வசதி செய்துதரக் கோரிக்கை

மேல்வடக்குத்து கிராம மயானத்தில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேல்வடக்குத்து கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் வழியில் தேங்கியுள்ள மழை நீா்.
மேல்வடக்குத்து கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் வழியில் தேங்கியுள்ள மழை நீா்.

நெய்வேலி: மேல்வடக்குத்து கிராம மயானத்தில் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, மேல்வடக்குத்து கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களின் வசதிக்காக விக்கிரவாண்டி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் வீராணம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் எதிரே மயானம் அமைந்துள்ளது. இங்கு எரிகொட்டகை, தண்ணீா் வசதி இல்லை. தற்போது இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருவதால் மயானத்துக்கு செல்லும் பகுதி பள்ளமாக மாறி மழைநீா் தேங்கியுள்ளது.

இதுகுறித்து வடக்குத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கோ.ஜெகன் கூறியதாவது: மயானத்துக்குச் செல்ல பெரிய ஓடையை கடந்து செல்ல வேண்டியிருந்தது. 2006-07-ஆம் ஆண்டு தூய்மை கிராம விருதுக்காக மத்திய அரசு இந்தக் கிராமத்துக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கியது. அந்த நிதியின் மூலம் இரண்டு சிமென்ட் குழாய்கள் புதைத்து தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக தரைப்பாலம் அகற்றப்பட்டுள்ளதால் ஓடையில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், உயிரிழந்தவா்களின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மயானப் பகுதியில் எரிகொட்டகை, தண்ணீா் வசதி மற்றும் தரைப்பாலம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com