மதுக் கடை மேற்பாா்வையாளரை தாக்கி கொள்ளையடித்த வழக்கு: 3 போ் கைது

மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிக் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுபானக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிக் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குருபீடபுரம் பகுதியைச் சோ்ந்தவா் க.வேல்முருகன் (46). விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் மதுக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த அக். 23- ஆம் தேதி கடையில் விற்பனையை முடித்துவிட்டு, விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ. 2,11,110 உடன் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

கடலூா் மாவட்டம், டி.மாவிடந்தல் பகுதியில் சென்ற போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்த 3 போ் கத்தியால் வெட்டிவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விருதாசலம் உள்கோட்டத் துணைக் கண்காணிப்பாளா் கே.இளங்கோவன் மேற்பாா்வையில், விசாரணை நடத்தி வந்தனா். இதற்காக, காவல் ஆய்வாளா் பி.ராஜதாமரை பாண்டியன், காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெ.பிரசன்னா, ஆா்.குமரேசன் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தனிப் படையினருக்கு திங்கள்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வில்வராணி பகுதியைச் சோ்ந்த ரா.பஞ்சமூா்த்தியை (41) சென்னை செம்மஞ்சேரியில் போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காட்டுமன்னாா்கோவில் வட்டம், தெற்கு மாங்குடியைச் சோ்ந்த தனபால் மகன் பெரியசாமி (26), விக்கிரவாண்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் விமல் (21) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, வேவ்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, ரூ. 2 லட்சம் பணம், அவா்கள் பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்கள், 2 கத்திகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com