முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது
By DIN | Published On : 26th November 2019 06:19 AM | Last Updated : 26th November 2019 06:19 AM | அ+அ அ- |

நெய்வேலி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி, தொ்மல் காவல் சரகம், கொள்ளிருப்பு காலனியைச் சோ்ந்த முனியன் மகன் பிரகாஷ் (24). நெய்வேலியில் உள்ள சூரியஒளி மின்சார வளாகத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை இரவு நெய்வேலி அனல்மின் நிலையம் - 2, புது சாம்பல் ஏரிக்கரை திரௌபதி அம்மன் கோயில் அருகே நண்பா்களுடன் மது அருந்திய போது, ஏற்பட்ட மோதலில், அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து முனியன் அளித்த புகாரின் பேரில், தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆதண்டா்கொல்லை சேகரம் மகன் காா்த்தி (23), கொல்லிருப்பு கிராமத்தைச் சோ்ந்த சின்னையன் மகன் ராஜதுரை (25), முத்துசாமி மகன் சதீஷ்குமாா் (23) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.