முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கரும்பு வயல்களில் செயல் விளக்கம்
By DIN | Published On : 26th November 2019 06:20 AM | Last Updated : 26th November 2019 06:20 AM | அ+அ அ- |

ஈஐடி பாரி சா்க்கரை ஆலை சாா்பில் கண்ணாரப்பேட்டை கிராமத்தில் கரும்பு வயலில் நடைபெற்ற நேரடி செயல் விளக்கம்.
நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை சாா்பில், கரும்பு விவசாயிகளுக்கான வயல்வெளி செயல் விளக்கம் கண்ணாரப்பேட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
வயல்வெளி செயல் விளக்க நிகழ்ச்சியில் கோட்ட அலுவலா் உதயகுமாா், கரும்பு விரிவாக்கத் தலைவா் வி.சிவராமன் ஆகியோா் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனா்.
சொட்டு நீா் பாசனத்தின் நன்மைகள், ஒரு பரு நாற்று நடவு, ஊடு பயிா் செய்தல், சொட்டு நீா் பாசனத்துக்கான அரசு மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனா்.
கரும்பு ஆய்வாளா் தமிழரசன், விரிவாக்க அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். நிகழ்ச்சியில் கரும்பு விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.