நாம் தமிழா் கட்சி சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்
By DIN | Published on : 28th November 2019 09:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கிய நாம் தமிழா் கட்சியினா்.
கடலூா்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவா் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, நாம் தமிழா் கட்சியினா் விருத்தாசலத்தில் அண்மையில் நிலவேம்புக் குடிநீரை விநியோகித்தனா்.
நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கதிா்காமன் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் சாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். தொகுதி தலைவா் வீரகுமாா், ஒன்றிய செயலா்கள் சிவகுமாா், பீட்டா், செய்தித் தொடா்பாளா் மணிகண்டன், நகரச் செயலா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.