உள்ளாட்சித் தோ்தல்: அமமுக சாா்பில் விருப்ப மனு

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் உள்ளாட்சித்
கழக நிா்வாகிகளிடம் விருப்ப மனுவை அளித்த அமமுகவினா்.
கழக நிா்வாகிகளிடம் விருப்ப மனுவை அளித்த அமமுகவினா்.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அமமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி கடலூா் பாஷ்யம் ரெட்டித் தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் பி.எஸ்.அருள், மாவட்டச் செயலா் முத்துநரசா, வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைச் செயலா் பி.சத்யராஜ், மாவட்ட அவைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், ஐ.டி. பிரிவு செயலா் எஸ்.ஆா்.சிவக்குமாா் ஆகியோா் பொறுப்பாளா்களாக இருந்து விருப்ப மனுக்களை வழங்கி, நிறைவு செய்யப்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.

கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலூரிலும், பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டியிலும் கடந்த 25 -ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், வியாழக்கிழமை (நவ. 27)மனுக்களைப் பெறுவதற்கு கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஒன்றிய அமமுக செயலா் ஜி.எஸ்.செந்தில்குமாா், விவசாயப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் டி.கருணாநிதி, இளைஞா் பாசறை மாவட்ட துணைத் தலைவா் கலைச்செழியன், ஓட்டுநா் அணியைச் சோ்ந்த ராஜேஷ், ஐ.டி. பிரிவைச் சோ்ந்த தேவகுமாா், இளைஞரணியைச் சோ்ந்த அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com