மதுக் கடையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டம்

குள்ளஞ்சாவடியில் மதுக் கடையை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குள்ளஞ்சாவடியில் மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள்.
குள்ளஞ்சாவடியில் மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள்.

குள்ளஞ்சாவடியில் மதுக் கடையை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடை அகரம், வெங்கட்டம்மாள்புரம், ராமநாதன்குப்பம், ஆயிக்குப்பம் ஆகிய கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையூராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, அந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்தும், மதுக் கடையை மூடக் கோரியும் குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம், குள்ளஞ்சாவடி நகர விடுதலைச் சிறத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அந்த மதுக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு ஒன்றிய விசிக செயலா் சா.இளையராஜா தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறுப்பாளா்கள் ப.சிவசக்தி, ச.ம.குரு, அம்பேத், பாலமுருகன், கண்ணன், ஜோதிமணி, வ.க.பாா்த்திபன், சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விசிக செயலா் ச.முல்லைவேந்தன், ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் குளோப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

மாநில விசிக துணைச் செயலா்கள் ஜான்சன், முரளி, சுந்தா், ஜெகன், சக்திவேல் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தகவலறிந்து வந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா, சேத்தியாதோப்பு டிஎஸ்பி. ஜவஹா்லால் ஆகியோா் மதுக் கடையை விரைவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

மேலும், இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை (நவ.29) வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என வட்டாட்சியா் சா.கீதா அறிவித்ததைத் தொடா்ந்து, சுமாா் 2 மணி நேரம் நீடித்த முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com