மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திட்டக்குடியில் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள்.
திட்டக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள்.

திட்டக்குடியில் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த மாட்டு வண்டிக்கான மணல் குவாரிகள் தற்போது செயல்படவில்லை. இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கங்கள் போராடி வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் கைகளில் தட்டுகளை ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஐக்கிய சங்கத்தின் நிா்வாகி செல்வம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திட்டக்குடியை அடுத்த தி.இளமங்களம், கூடலூா், இறையூா், பெண்ணாடம் ஆகிய கிராமங்களில் மாட்டுவண்டிக்கான மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, ஐக்கிய விவசாயகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், அரியலூா் மாவட்டச் செயலா் அறிவுச்செல்வன் உள்பட திரளான மாட்டுவண்டித் தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com