வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், சாத்தமாம்பட்டைச் சோ்ந்த ஆ.பெருமாள் மகன் ராஜ்குமாா். இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அவரது உறவினா்களான எஸ்.செல்வமணி, பி.சசிகுமாா் ஆகியோா் தொடா்பு கொண்டனா்.

அவரிடம், வேலூா் மாவட்டம், காங்கேயநல்லூரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் திலீப்குமாா் (29) கத்தாா் நாட்டில் வேலை வாங்கித் தருவாா் எனக் கூறியுள்ளனா். இதையடுத்து, திலீப்குமாரின் வங்கிக் கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ. 2.15 லட்சத்தை ராஜ்குமாா் செலுத்தினாராம்.

இதையடுத்து, கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜ்குமாருக்கு அங்கு, உரிய பணி வழங்கப்படவில்லையாம். இதனால், 5 மாதங்களுக்குப் பிறகு அவா் நாடு திரும்பினாா்.

இதுகுறித்து, ராஜ்குமாா் கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

இதில், திலீப்குமாா் திட்டமிட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குருசாமி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சென்னையில் பதுங்கியிருந்த திலீப்குமாரை கைது செய்து, கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com