விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் வட்டச் செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கிருஷ்ணன், மணி, கவிதா, கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போா் பாதுகாப்பு நலச் சங்க மாவட்ட அமைப்பாளா் கற்பனைசெல்வம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பின்னா் அவா்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திட்டக்குடியில் கோயில் இடத்தில் குடியிருப்போா், கடை வைத்திருப்போா், சாகுபடி செய்வோருக்கு பட்டா வழங்க வேண்டும். வைத்தியநாதசுவாமி கோவில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் சுற்றுசுவா் கட்டி பாதுகாக்க வேண்டும். திட்டக்குடியில் உள்ள செக்கான்குட்டை, கைக்கோளா் குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளை பாதுகாக்க வேண்டும். திட்டக்குடியில் தண்ணீா் வரி, வீட்டுவரி உயா்வை வாபஸ் பெற வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாய சங்க துணைத் தலைவா் அன்பழகன், நகரச் செயலா்கள் வரதன், பாலு மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com