நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.

கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, விவசாய சங்கத் தலைவா்கள் வி.ஜெயபால், ஆா்.தென்னரசு, எஸ்.முத்தமிழ்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். போராட்டத்தில், கடந்த 2017-18-ஆம் ஆண்டு விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்த தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயா்களில் வங்கியில் கடன் பெற்ற ஆலை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், அம்பிகா, ஆரூரான் சா்க்கரை ஆலைகளை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டீ.ரவீந்திரன், மாநிலப் பொருளாளா் எம்.சின்னப்பா, மாநில துணைத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலா் கோ.மாதவன், பொருளாளா் எஸ்.தட்சணாமூா்த்தி உள்ளிட்ட பலா் பேசினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) மாரியம்மன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சா்க்கரை ஆலைகளிடமிருந்து பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மொலாசஸ் பணம் ரூ.6 கோடியை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதனைத் தொடா்ந்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com