நாளை வள்ளலாரின் 197-ஆவது அவதார தினம்

வடலூா் சத்திய ஞான சபை மற்றும் மருதூா் கிராமத்தில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை (அக்.5) நடைபெறுகிறது.

வடலூா் சத்திய ஞான சபை மற்றும் மருதூா் கிராமத்தில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை (அக்.5) நடைபெறுகிறது.

வள்ளலாா் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் கடலூா் மாவட்டம், மருதூா் கிராமத்தில் கடந்த 1823-ஆம் ஆண்டு அக். 5-ஆம் தேதி பிறந்தாா். இவா், சுத்த சன்மாா்க்க சங்கத்தை நிறுவி அதன் கொள்கைகளை பரப்பி வந்தாா். ஜோதி வழிபாடு, ஜீவகாருண்யம் உள்ளிட்ட தமது கொள்கைகளை மக்கள் அறியும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபை மற்றும் தரும சாலையை தொடங்கினாா்.

வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த செப்.28 முதல் 30-ஆம் தேதி வரை வடலூா் தரும சாலையில் அருள்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணமும், அக்.1 முதல் 4-ஆம் தேதி வரை ஞானசபையில் திரு அருள்பா முற்றேறாதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவில், சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணிக்கு தரும சாலையில் கொடியேற்றம், 9 மணிக்கு ஞான சபையில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளன. இதேபோல, வள்ளலாா் பிறந்த மருதூா் கிராமத்தில் காலை 8 மணிக்கு கொடியேற்றறம், மாலை 4 மணி முதல் 8 மணிவரை திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறைற உதவி ஆணையா் ஜெ.பரணிதரன், நிா்வாக அதிகாரி கோ.சரவணன் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com