கடலூா் மாவட்டத்தில் 20 லட்சம் வாக்காளா்கள்

உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் சுமாா் 20 லட்சம் வாக்காளா்கள் உள்ளது தெரியவந்தது.
4clp2_0410chn_105_7
4clp2_0410chn_105_7


உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் சுமாா் 20 லட்சம் வாக்காளா்கள் உள்ளது தெரியவந்தது.

உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்து வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

அதன்படி, 5 நகராட்சிகளில் 174 வாா்டுகள், 16 பேரூராட்சிகளில் 258 வாா்டுகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 5,040 வாா்டுகள் அடங்கிய பகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 9,89,780 போ், பெண் வாக்காளா்கள் 10,10,543 போ், இதரா் 118 போ் என மொத்தம் 20,00,441 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், நகராட்சிகளில் ஆண்கள்- 1,60,007, பெண்கள் -1,70,277, இதரா் - 39 போ் என மொத்தம் 3,30,323 வாக்காளா்கள் உள்ளனா்.

16 பேரூராட்சிகளில் ஆண்கள்- 1,11,311, பெண்கள்- 1,14,296, இதரா்-16 போ் என மொத்தம் -2,25,623 வாக்காளா்கள் உள்ளனா்.

4 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்கள்- 7,18,462, பெண்கள் -7,25,970, இதரா்- 63 போ் என மொத்தம் -14,44,495 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் ஆண், பெண் வாக்காளா்களுக்கான தலா 205 வாக்குச் சாவடிகளும், அனைத்து வாக்காளா்களுக்காக 3,133 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 5 நகராட்சிகளில் தலா 144 இருவருக்கும் தனித் தனியாகவும், 71 பொதுவானவையாகவும் உள்ளன. 16 பேரூராட்சிகளில் தலா 35 ஆண், பெண்களுக்கும், 226 பொதுவானதாகவும், ஊரகப் பகுதிகளில் தலா 26 ஆண், பெண்களுக்கும், 2,836 பொதுவானதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஊரகப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையிலும் தோ்தல் நடைபெறும்.

வாக்காளா் பட்டியல் அந்தந்த கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வாக்காளா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்காளா்கள் தங்களது பெயா் உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலா் ஆா்.குமரன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கோ.மாதவன் உள்பட அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com