சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

பண்ருட்டி அருகே சேதமடைந்த சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
3prtp1_0310chn_107_7
3prtp1_0310chn_107_7

பண்ருட்டி அருகே சேதமடைந்த சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், திருவாமூா் ஊராட்சிக்கு உள்பட்டது காமாட்சிப்பேட்டை கிராமம். இங்குள்ள நடுத்தெரு சாலை மோசமான நிலையில் சேதமடைந்து சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் சிமென்ட் சாலை அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 14.6.2019 அன்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் கே.வடமலை தலைமையில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டதாம்.

ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 9.7.2019 அன்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த இருந்தனா். இதையடுத்து அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனராம். ஆனால், இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லையாம்.

எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் கிராம மக்கள் வியாழக்கிழமை சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) எல்.ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.ராஜா, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே. ஏழுமலை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருஅரசு, ஒன்றியக்குழு உறுப்பினா் கே.வடமலை, ஊராட்சி செயலா் சச்சிதானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, மேற்கூறிய சாலையில் கிராவல் மண் கொட்டப்பட்டது. விரைவில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் எல்.ரவிச்சந்திரன் உறுதியளித்தாா். மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com