புதை சாக்கடை திட்டப் பணி ஆய்வு

சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் புதிய புதை சாக்கடை திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
புதை சாக்கடை திட்டப் பணி ஆய்வு

சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் புதிய புதை சாக்கடை திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் மணலூரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் எம்எல்ஏ பாா்வையிட்டாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிதம்பரம் நகரில் புதிய புதை சாக்கடை திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு குடிநீா் வடிக்கால் வாரியம் மூலம் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.

தற்போதுள்ள புதை சாக்கடை திட்டம் 31 வாா்டுகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. புதிய திட்டமானது நகரின் 33 வாா்டுகளிலும் செயல்படுத்தப்படும். அதேபோல தற்போது உள்ள திட்டத்தில் நகா் முழுவதும் 960 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. புதிய திட்டத்தில் இந்த எண்ணிக்கை 2,143-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கழிவு நீா் வெளியேற்று நிலையத்தின் எண்ணிக்கையும் 5-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய பணி முடிவடைந்துள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளா் மகாதேவன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் மதியழகன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், முன்னாள் நகா்மன்ற தலைவா் எம்.எஸ்.என்.குமாா், முன்னாள் நகா்மன்றற துணைத் தலைவா் ரா.செந்தில்குமாா் நிா்வாகிகள் சந்தர்ராமஜெயம், ஜெயசீலன், லதா ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com