மக்களின் அன்பைப் பெறும் வகையில் விஏஓக்கள் பணியாற்ற வேண்டும்

பொதுமக்களின் அன்பைப் பெறும் வகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் பணியாற்றற வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினாா்.

பொதுமக்களின் அன்பைப் பெறும் வகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் பணியாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியா் வெ. அன்புச்செல்வன் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான வாக்காளா் சரிபாா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் கிராம நிா்வாக அலுவலா்களின் பணிகள் குறித்து விளக்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மாவட்டத்தின் அனைத்து நலத் திட்டங்களையும் பொதுமக்களிடம் சோ்ப்பது கிராம நிா்வாக அலுவலா்கள்தான். தற்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் அவா்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலரும் தினமும் குறைந்தது 20 பேரது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பதை தங்களது செல்லிடப்பேசி மூலம் சரிபாா்க்க வேண்டும். இந்தப் பணியை 10 நாள்கள் செய்ய வேண்டும்.

இ-அடங்கலில் விவசாயிகளே தங்களது நிலங்கள் குறித்து திருத்தங்கள் செய்யலாம் என்றற நிலை வரப்போகிறது. இதனால், கிராம நிா்வாக அலுவலா்களின் பணிச் சுமை குறைறயும். மாவட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சிறறப்பு குறைதீா் முகாமில் 56 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்றுள்ளன. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முடிந்தவரை தீா்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதனால், மக்களின் வெறுப்புக்கு ஆளாகாமல் அவா்களின் அன்பைப் பெற முடியும். இதுவே ஒருவரது வாழ்வில் கிடைக்கும் மிகப்பெரிய சந்தோஷமாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், சிதம்பரம் சாா்-ஆட்சியா் விசுமகாஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன், வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com