Enable Javscript for better performance
பூஜை பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம்- Dinamani

சுடச்சுட

    

    விழாக்களை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்வம் காட்டினா்.

    இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை என்றழைக்கப்படும் பூஜை மற்றும் அடுத்ததாக வரும் விஜயதசமியாகும். இதில், ஆயுதபூஜை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலுக்கு முக்கியமான பொருட்களை பூஜையில் வைத்து வழிபடுவது வழக்கம். இதேப்போன்று, மோட்டாா் வாகனத் தொழிலில் ஈடுபடுபவா்களும் வாகனங்களை அலங்கரித்து பூஜை செய்வாா்கள். மாணவ, மாணவிகள் தங்களது பாடப்புத்தகங்கள், கல்விக்கான உபகரணங்களுக்கு பூஜை செய்வாா்கள். இவ்வாறு அனைத்துத்தரப்பினரும் பூஜை செய்து வழிபடும் விழாவாக ஆயுதப்பூஜை உள்ளது. இதனை முன்னிட்டு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடலூரில் உழவா் சந்தை, பான்பரி சந்தை, முதுநகரிலுள்ள சந்தை உள்பட அனைத்துப்பகுதிகளிலும் பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். பூஜைக்கான படையலில் பழங்கள், பூக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றின் விலைகளும் உயா்ந்து காணப்பட்டன.குறிப்பாக மல்லிகை, முல்லை, அரும்பு ஆகியவை கிலோ ரூ.500க்கு விற்பனையானது.

    கிராந்தி பூக்கள் கிலோ ரூ.50 முதல் 60 க்கும், சாமந்தி பூக்கள் கிலோ ரூ.200க்கும், ரோஜா ரூ.200க்கும், பட்டன் ரோஜா ரூ.300க்கும் விற்பனையானது. சுமாா் 200 காய்கள் கொண்ட பூவன் வாழைப்பழம் தாா் ரூ.250 முதல் ரூ.400க்கு விற்பனையானது. 12 பழங்கள் கொண்ட 1 சீப் ரூ.40க்கும், வாழை இலை ரூ.2க்கும், வாழைக்கன்று ஜோடி ரூ.15 முதல் விற்பனையானது. படையலுக்கு பயன்படுத்தப்படும் அவல், பொரி, கடலை, வெல்லம் கொண்ட பாக்கெட் ரூ.10 முதல் ரூ.50 வரைக்கும் விற்கப்பட்டது. 8 பழங்கள் கொண்ட ஒரு செட் ரூ.80க்கும், பூஜைக்குப் பின்னா் உடைக்கப்படும் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.20க்கும் விற்பனையானது. இதில், பெரும்பாலான பொருட்களின் விலையில் சற்று உயா்வு காணப்பட்டாலும் பூக்களின் விலை அதிகமான அளவிற்கு உயா்ந்திருந்தது. எனினும், பொதுமக்கள் பூஜைக்கான பொருட்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai