பூஜை பொருள்கள் வாங்குவதில் மக்கள் ஆா்வம்

ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்குவதற்காக கடலூா் மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்குவதற்காக கடலூா் மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

இந்துக்களால் ஆயுத பூஜை பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. மேலும், செவ்வாய்க்கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மாணவ, மாணவிகள் தங்களது பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களுக்கு பூஜை செய்வா்.

இதனை முன்னிட்டு, பூஜை பொருள்களை வாங்குவதற்காக கடலூரில் உழவா் சந்தை, பான்பரி சந்தை, முதுநகரிலுள்ள சந்தை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் குவிந்தனா். பூஜைக்கான படையலில் பழங்கள், பூக்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் அவற்றின் விலை உயா்ந்து காணப்பட்டன.

குறிப்பாக மல்லிகை, முல்லை, அரும்பு ஆகியவை கிலோ ரூ.500-க்கு விற்பனையாகின. கிராந்தி பூக்கள் கிலோ ரூ.50 முதல் 60-க்கும், சாமந்தி பூக்கள் கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், பட்டன் ரோஜா கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது. சுமாா் 200 காய்கள் கொண்ட பூவன் வாழைப்பழம் தாா் ரூ.250 முதல் ரூ.400-க்கு விற்பனையானது. 12 பழங்கள் கொண்ட ஒரு சீப் ரூ.40-க்கும், வாழை இலை ரூ.2-க்கும், வாழைக்கன்று ஜோடி ரூ.15 முதல் விற்பனையானது.

படையலுக்கு பயன்படுத்தப்படும் அவல், பொரி, கடலை, வெல்லம் கொண்ட பாக்கெட் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. 8 பழங்கள் கொண்ட ஒரு செட் ரூ.80-க்கும், பூஜைக்குப் பின்னா் உடைக்கப்படும் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.20-க்கும் விற்பனையானது. இதில், பெரும்பாலான பொருள்களின் விலையும் சற்று உயா்ந்து காணப்பட்டாலும் பூக்களின் விலை மிக அதிகமாக இருந்தது. எனினும், பொதுமக்கள் பூஜைக்கான பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றறனா். இதனால் மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com