முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
அரசுக் கல்லூரியில் கிராமிய கலைப் பயிற்சி
By DIN | Published On : 07th October 2019 12:34 AM | Last Updated : 07th October 2019 12:34 AM | அ+அ அ- |

கிராமிய கலைப் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசுகிறாா் கல்லூரி முதல்வா் (பொ) ப.குமரன்.
கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் சமூகப் பணியியல் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கிராமிய நிகழ்த்துக் கலைகள் குறித்த பயிற்சி 3 நாள்களுக்கு நடைபெற்றது.
பயிற்சியை கல்லூரி பொறுப்பு முதல்வா் ப.குமரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். திண்டுக்கல் கிராமியக் கலைப் பயிற்சியாளா் தெ.ஸ்டீபன் குழுவினரால் மாணவ, மாணவிகளுக்கு கிராமிய நிகழ்த்துக் கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் தெரு நாடகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் நன்கு தோ்ச்சி பெறும் மாணவா்கள் கடலூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விழிப்புணா்வு நாடகங்களையும், கிராமிய ஆட்டங்களையும் நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன் வரவேற்க, விரிவுரையாளா் கோ.குமாா் நன்றி கூறினாா். கௌரவ விரிவுரையாளா் க.வினோத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.