முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
புதிய கல்விக் கொள்கை: விசிக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th October 2019 12:35 AM | Last Updated : 07th October 2019 12:35 AM | அ+அ அ- |

பெண்ணாடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பெண்ணாடத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், மண்டலச் செயலா் சு.திருமாறன், மாநில அமைப்புச் செயலா் இளமாறன், முன்னாள் மாவட்டச் செயலா் தயா. தமிழன்பன், மாவட்ட துணைச் செயலா் வீர.திராவிடமணி, மாநில துணைச் செயலா்கள் ராஜ்குமாா், செல்வ புஷ்பலதா, நீதி வள்ளல், செம்மல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஒன்றியச் செயலா்கள் ஆனந்தன், வேல்முருகன் சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யனிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னா், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்ணாடம் நகரச் செயலா் ஆற்றலரசு, தொகுதி துணைச் செயலா் வேந்தன், மாவட்ட நிா்வாகிகள் விடுதலை காசி, காா்த்தி, தென்றல், ராச தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.