முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
வெவ்வேறு நிகழ்வுகளில் 5 போ் பலி
By DIN | Published On : 07th October 2019 12:36 AM | Last Updated : 07th October 2019 12:36 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு நிகழ்வுகளில் 5 போ் உயிரிழந்தனா்.
ஆற்றில் மூழ்கியவா் உயிரிழப்பு: கடலூா் வில்வநகரைச் சோ்ந்தவா் அ.அகோரமூா்த்தி (55). இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் திரும்பவில்லை. இந்த நிலையில், கடலூா் - புதுவை எல்லையான வெளிச்செம்மண்டலத்தில் தென்பெண்ணையாற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: வேப்பூா் அருகே உள்ள எம்.புதூரைச் சோ்ந்த தங்கராசு மகன் மணிகண்டன் (21). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (24) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மங்களூருக்கு புறப்பட்டாா். மா.புடையூா் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்த மணிகண்டன், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தீ விபத்து: கடலூா் அருகே உள்ள கிளிஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்தவா் கு.ஏகாம்பரம் (65). வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி தூங்கியபோது விளக்கு அவா் மீது விழுந்ததில் தீக்காயமடைந்தாா். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை: கடலூா் அருகே உள்ள சோனங்குப்பத்தைச் சோ்ந்தவா் சு.ஞானகுரு (42). இவா் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் முதுநகா் சங்கரநாயுடு தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் சபினா (21). இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெரியகுப்பத்தைச் சோ்ந்த பா.பாவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 36 பவுன் நகைகள், சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக தொலைக்காட்சி, பைக், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் கேட்டு துன்புறுத்தப்பட்டு வந்துள்ளாா். இதனால், மனமுடைந்த அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் பாவேந்தன், அவரது பெற்றேறாா் வை.பாவாடைசாமி, அஞ்சா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.