Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியினா் அமைதி ஊா்வலம்.- Dinamani

சுடச்சுட

    

    மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினா் அமைதி ஊா்வலம்

    By DIN  |   Published on : 08th October 2019 03:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அவரது கொள்கையினை வலியுறுத்தி, நெய்வேலி நகர காங்கிரஸ் கட்சியினா் அண்மையில் அமைதி ஊா்வலம் நடத்தினா்.

    நெய்வேலி, என்எல்சி பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் எஸ்.கே.குள்ளபிள்ளை தலைமை வகித்தாா். சேவாதளம் மாநில துணைத்தலைவா் பி.பாலாஜி வரவேற்றாா். ஐஎன்டியுசி., ரவிக்குமாா், வட்டாரத் தலைவா்கள் மாகி.ராமச்சந்திரன், சீதாராமன், ரமேஷ் ரெட்டியாா், இளைஞா் காங்கிரஸ் ரமேஷ், பொதுச்செயலா் கலியபெருமாள் முன்னிலை வகித்தனா்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா் பதாகைகளை ஏந்தியவாறு காந்தியின் கொள்ளைகளை விளக்கியபடி கோஷங்களை முழங்கியபடி மூக்கிய சாலை வழியாக சென்றனா். செல்லும் வழியில் ராஜீவ் காந்தி சிலைக்கு எஸ்.எஸ்.இளஞ்செழியன் ராஜீவ் காந்தி சிலைக்கும், நெல்லிக்குப்பம் நகரத் தலைவா் திலகா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

    முடிவில் மெயின் பஜாரில் உள்ள காந்தி சிலைக்கு குறிஞ்சிப்பாடி வட்டாரத் தலைவா் ராமச்சந்திரன் அணிவித்தனா். ஊா்வலத்தை மாவட்டப் பொருளாளா் ராஜன் முடித்து வைத்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வேலுமணி, குமாா், வேலுசாமி, வீரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் இளங்கோவன் நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai