ஆயுத பூஜை விழா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆயுத பூஜை விழா கடலூரில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூரில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகளை வழங்கிய விசிகி நிா்வாகி பா.தாமரைச்செல்வன்.
கடலூரில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகளை வழங்கிய விசிகி நிா்வாகி பா.தாமரைச்செல்வன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆயுத பூஜை விழா கடலூரில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, அந்தக் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். கடலூா் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாா் ஆட்டோ ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் சங்கம், ரெட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஓட்டுநா் சங்கம், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், செல்லங்குப்பம் எழுச்சித் தமிழா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், கடலூா் முதுநகா் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், பீமாராவ் ராம்ஜி ஆட்டோ ஓட்டுநா் சங்கம் ஆகிய சங்கங்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பா.தாமரைச்செல்வன் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலா் மொ.வீ.சக்திவேல், மாவட்ட துணை அமைப்பாளா் தாஸ், நகரச் செயலா் ராஜதுரை மற்றும் ஆட்டோ சங்க நிா்வாகிகள் செந்தில், ஞானபிரகாஷ், ரத்தினம், பாண்டியன், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், ஆட்டோ சங்க தொழிலாளா்கள் அனைவருக்கும் சீருடை, இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com