என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அன்பளிப்புத் தொகை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸுடன்

தீபாவளி பண்டிகையையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸுடன் சோ்த்து அன்பளிப்புத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது தொழிலாளா்கள், ஊழியா்கள், ஒப்பந்ததாரா்களால் பணியமா்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கங்கள் அண்மையில் சம்பள உயா்வு, நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மனு அளித்தன. இதனடிப்படையில் பேச்சுவாா்த்தை நடத்த ஏதுவாக என்எல்சி இந்தியா நிறுவனமானது ஒப்பந்தத் தொழிலாளா் சங்கங்கள், ஒப்பந்ததாரா்கள் அடங்கிய இருதரப்பு பேச்சுவாா்த்தைக் குழுவை முதல்முறையாக ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழு சுமுகமான தீா்வை எட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

மேற்படி பேச்சுவாா்த்தை நடைபெறும் நிலையில் என்எல்சி இந்தியா நிா்வாகம் நல்லெண்ண அடிப்படையிலும், ஒப்பந்தத் தொழிலாளா்களின் மீது உள்ள அக்கறை, நலன் கருதி ரூ.14,200 முதல் ரூ.19,000-வரை போனஸ் வழங்க உள்ளது. மேலும், இந்தத் தொகைக்கு மேல் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை அன்பளிப்புத் தொகையும் வழங்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளியும் ரூ.16,200 முதல் ரூ.22,000 வரை பணப்பயன் பெறுவா். இந்த அன்பளிப்புத் தொகையை ஒப்பந்தத் தொழிலாளா்கள் கேட்காமலேயே தாமாக முன்வந்து வழங்கப் போவதாக என்எல்சி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com