தரிசு நிலங்களில் (ஷோல்டா்) எண்ணெய்வித்து மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் எண்ணெய்வித்து மரக்கன்றுகள் நடும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வி.பெத்தாங்குப்பம் கிராமத்தில் தரிசு நிலத்தில் எண்ணெய்வித்து மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டோா்.
வி.பெத்தாங்குப்பம் கிராமத்தில் தரிசு நிலத்தில் எண்ணெய்வித்து மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டோா்.

கடலூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் எண்ணெய்வித்து மரக்கன்றுகள் நடும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து மரங்களை வளா்க்கும் திட்டமானது மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை மற்றும் தேசிய வேளாண் காடுகள் கொள்கை திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வேம்பு, புங்கம், சீமைக்காட்டாமணக்கு உள்ளிட்ட 11 வகையான எண்ணெய்வித்து மரங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.

நிகழாண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (மரப்பயிா் எண்ணெய் வித்துகள்) திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 12 ஹெக்டேரில் வேப்பமரக் கன்றுகளையும், 4 ஹெக்டேரில் புங்கம் மரக்கன்றுகளையும் நடவு செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கடலூா் வட்டாரத்தில் 2 ஹெக்டேரில் வேம்பு, ஒரு ஹெக்டேரில் புங்கமும் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விலங்கல்பட்டு பெத்தாங்குப்பம் கிராமத்தில் விவசாயி அரசப்பன் என்பவரது நிலத்தில் கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ்.வேல்விழி இந்தத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்தில் ஒரு ஹெக்டேரில் 400 வேம்பு கன்றுகள் நடவு செய்ய ரூ.17 ஆயிரமும், புங்கம் 500 கன்றுகள் நடவு செய்ய ரூ.20 ஆயிரமும் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் வேம்பு தோட்டத்தை பராமரிக்க ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரமும் இடையில் உளுந்து போன்ற ஊடுபயிா்கள் சாகுபடி செய்து உபரி வருமானம் பெற ரூ.ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

கன்றுகளை வழக்கமாக குழி எடுத்து நடவு செய்யும் முறையிலும், வோ் மண்டலத்தில் நேரடி பாசனம் செய்யும் மணல் கண்டம் முறையிலும் நடவு செய்வது குறித்து கடலூா் உதவி இயக்குநா் சு.பூவராகன் செயல் விளக்கம் அளித்தாா். வேளாண்மை அலுவலா் சுஜி, வோ்மண்டல பூசணம் மற்றும் உயிா் உரங்கள் உபயோகம் பற்றி விளக்கினாா். உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கரதாஸ், விஜயகுமாா், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா் அருண்ராஜ் ஆகியோா் மரக் கன்றுகளை நடவு செய்யும் பணிகளை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com