சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திட்டக்குடி அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
ராமநத்தத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.
ராமநத்தத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.

திட்டக்குடி அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தத்தில் இருந்து தொழுதூா் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலை குறுகியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்ததையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அனைத்து ஆக்கிரமிப்பாளா்களுக்கும் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பாளா்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

இதனைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனா். 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான குழுவினா் மற்றும் வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா். இதையொட்டி, ராமநத்தம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பிறகு சாலையை அளவீடு செய்து

புதிய சாலை அமைக்க வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்துதர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com