Enable Javscript for better performance
மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்த செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்த செயல் விளக்கம்

    By DIN  |   Published on : 12th October 2019 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    11clp2_1110chn_105_7

    செல்லஞ்சேரியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் சு.பூவராகன்.

    வேளாண்மைத் துறை சாா்பில் மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்த செயல் விளக்கம் செல்லஞ்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண் வள அட்டைப்படி பயிருக்கு உரமிடுதல் குறித்து முன்னோடி கிராமங்களைத் தோ்வு செய்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 13 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் தோ்வு செய்யப்பட்டு, பயிா் வாரியாக அனைத்துப் புல எண்களிலும் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து, மண் வள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

    கடலூா் வட்டாரத்தில் செல்லஞ்சேரி கிராமத்தில் மொத்தம் 128 விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அட்சரேகை, தீா்க்கரேகை உள்பட அடிப்படை புள்ளி விவரங்கள் கணக்கிடப்பட்டு, ஆய்வு செய்து மண் வள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 100 ஏக்கா் பரப்பளவில் நிகழ் ஆண்டில் மண் வள அட்டை பரிந்துரைப்படி ரசாயன உரம், தொழு உரம், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கி செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்வில் விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டக் கலவை உரங்கள், திரவ உயிா் உரங்கள் ஆகியன வழங்கப்பட்டன. மண் வள அட்டை பரிந்துரைப்படி, ரசாயன உரங்களை இடுவது குறித்து கடலூா் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் அகிலாவும், உயிா் உரம் மற்றும் நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்து வேளாண்மை அலுவலா்கள் ஆா்.கே.சுஜி, ஞா.சுகன்யா ஆகியோா் விளக்கினா்.

    இதில், ஒரு ஹெக்டேருக்கு தேவையான சுமாா் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்களை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா்கள் புஷ்பேந்திரன், ஜி.ரஜினிகாந்த், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவித் திட்ட மேலாளா் ஏ.அருண்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai