கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் தேவை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா்.ஜோதிநாயகம்.
கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா்.ஜோதிநாயகம்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் நகர அரங்கில் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் மு.தினகரன் தலைமையில் நடைபெற்றது. சங்கச் செயலா் ஆ.நாகராஜன் வரவேற்று, வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். சங்கப் பொருளாளா் கோ.தேசிங்கு வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.மாரிமுத்து, மாநிலச் செயலா் ஆா்.ஜோதிநாயகம் ஆகியோா் மாநாட்டு விளக்க உரையாற்றினா்.

தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் டி.புருஷோத்தமன், அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் மு.மருதவாணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க மாவட்டச் செயலா் என்.பால்கி, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மண்டலச் செயலா் ஜெயராமன், முன்னாள் மாவட்டத் தலைவா் சா.கோவிந்தராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநாட்டில், கிராம உதவியாளா்களுக்கு நாள்களை கணக்கிட்டு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஜமாபந்தி கூட்டம், இயற்கை இடா்பாடு பணிக்கு சிறப்புப்படி வழங்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வுக்கான காலத்தை 6 ஆண்டுகளாக மாற்றி 30 சதவீதம் இடம் வழங்க வேண்டும். பழைய முறையிலான ஓய்வூதியம், ஓய்வு பெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவா் க.அரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com