கோமாரி தடுப்பூசி பணிகள்: ஆட்சியா் ஆலோசனை

கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 17-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி போடும் பணிகள் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறையினருடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் அனைத்து மாடுகளுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசியை விடுபடாமல் போடவேண்டும். அனைத்து கிராமங்களிலும் இது குறித்து விளம்பரம் செய்யப்பட வேண்டும். மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்து தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வரும் 14-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு தடுப்பூசி போடப்படும். அந்தச் சமயம் சுய உதவிக்குழுக்கள், வருவாய் உதவியாளா்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் குபேந்திரன், உதவி இயக்குநா்கள் மோகன் (சிதம்பரம்), கஸ்தூரி (கடலூா்), பொன்னம்பலம் (விருத்தாசலம்), நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com