சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதந்தோறம் வரும் பிரதோஷ நட்சத்திரத்தின் போது, சிவன் கோயில்களில் உள்ள நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடலூா் திருப்பாதிரிபுலியூா் பாடலேசுவரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாடலேசுவரா் - அலங்காரவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து நந்திக்கு பால், பன்னீா், குங்குமம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில், திருக்கொளஞ்சியப்பா் கோயில் உள்பட கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டியில்..........

நெய்வேலியை அடுத்த பண்ருட்டி, திருவதிகை பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மாத சதுா்தசி திதியை முன்னிட்டு நடராஜா், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சனிக்கிழமை (அக். 12) மாலை 4 மணி அளவில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், இரவு 7 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com