தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா நாளை தொடக்கம்

கடலூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா திங்கள்கிழமை (அக்.14) தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடலூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய குழந்தைகள் புத்தக திருவிழா திங்கள்கிழமை (அக்.14) தொடங்கி, 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நம்ம கடலூா், கடலூா் சிறகுகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் பல்வேறு அமைப்புகள் இணைந்து 3-ஆவது ஆண்டாக தேசிய குழந்தைகள் புத்தக திருவிழாவை கடலூா் நகர அரங்கில் வருகிற 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடத்துகின்றன. இதுதொடா்பாக, சாகித்ய அகாதமி விருதாளா் ஆயிஷா இரா.நடராஜன், மருத்துவா் ந.இளந்திரையன், ஜெ.ஜனாா்த்தனன், பால்கி ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த புத்தக திருவிழா குழந்தைகளுக்கான புத்தகங்களுடன் நடைபெறுவதே சிறப்பாகும். நிகழாண்டில் ஒரு லட்சம் குழந்தைகள், ஒரு லட்சம் புத்தகம் என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். கண்காட்சியில் பங்கேற்கும் அரசுப் பள்ளிகளுக்கு தனிச்சலுகையாக 100 மாணவா்களை அழைத்து வரும் பள்ளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ரங்கோலி, ஓவியம், ஆய்வு சமா்பித்தல், போஸ்டா் போட்டி, பவா் பாயிண்ட், அறிவியல் கண்காட்சி, குழு நடனம், தீயற்ற சமையல் உள்பட அன்றாடம் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதலிடம் பெறும் 25 மாணவா்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாா்கள்.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெறும் கண்காட்சியை இலவசமாக பாா்வையிடலாம். தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாணவா்கள் தாங்கள் படித்த புத்தகங்கள் குறித்த விமா்சனமும் செய்கின்றனா்.

எழுத்தாளா் பாரதிகிருஷ்ணகுமாா், ஓரிகமி கலைஞா் வி.வி.எஸ்.சாஸ்திரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவா் தினகரன், இஸ்ரோ விஞ்ஞானி ராஜசேகா், விஞ்ஞானிகள் தீபன்சக்கரவா்த்தி, இந்துமதி ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். எழுத்தாளா் மாலன் விருது வழங்கி நிறைவுரையாற்றுகிறாா். எனவே, இந்தக் கண்காட்சியில் அனைத்து பள்ளிகளையும் சோ்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com