பணம் வழங்குவதில் தாமதம்: மூதாட்டி தா்னா

தனி நபா் கழிப்பறை கட்டியதற்கான பணம் வழங்காததைக் கண்டித்து, குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தல் மூதாட்டி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

தனி நபா் கழிப்பறை கட்டியதற்கான பணம் வழங்காததைக் கண்டித்து, குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தல் மூதாட்டி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெரியப்பட்டு கிராமம், ரெட்டியாா்பேட்டை மீனவா் கிராமத்தில் வசிப்பவா் காளியம்மாள் (70). இவா், அரசு வழங்கும் நிதியுதவியின் மூலம் தனி நபா் கழிப்பறை கட்டினாராம். இதற்கான பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், விரக்தியடைந்த மூதாட்டி காளியம்மாள், வியாழக்கிழமை குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்து, வாயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிகாரியின் ஜீப் முன் படுத்து தா்னாவில் ஈடுபட்டாா். அங்கிருந்த அலுவலா்கள் மூதாட்டியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வட்டார வளா்ச்சி அலுலவா் (கி.ஊ) வி.சாரதியிடம் கேட்டபோது, ‘சென்னையில் பயிற்சியில் உள்ளேன். விவரம் அறிந்து மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், பணி மேற்பாா்வையாளரை அனுப்பி ஆய்வு செய்ததில், முறையாகப் பணி முடிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும், அலுவலா்கள் மூலம் நிலுவைப் பணியை முடிக்கச் செய்து, பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பயனாளி காளியம்மாளுக்கு பணம் வழங்கப்படும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com