மாட்டு வண்டிக்கான மணல் குவாரி திறக்கக் கோரிக்கை

மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறக்க வலியுறுத்தி, வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறக்க வலியுறுத்தி, வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திட்டக்குடி அருகிலுள்ள தி.இளமங்கலத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்தக் குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதாகவும், தனியாரின் பட்டா நிலங்களிலும் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீா் மட்டம் கீழே சென்றுவிட்டதாகவும் கூறி, அந்தப் பகுதியினா் மணல் குவாரியை மூட வலியுறுத்தி சுமாா் 500 மாட்டு வண்டிகளைச் சிறைப்பிடித்தனா்.

இதுதொடா்பாக திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு, குவாரியைத் தற்காலிகமாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டு மணல் குவாரியும் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் செந்தில்வேலிடம் மாட்டு வண்டித் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில், மணல் குவாரி மூடப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளா்கள் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரசு பரிசீலனையில் உள்ள எறையூா், இடைச்செருவாய், தொழுதூா், ஆகிய பகுதிகளில் புதிதாக மணல் குவாரி திறக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com