விவசாயிகள் சங்கக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி கே.ஆா்.ஜி. வளாகத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே குமராட்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
சிதம்பரம் அருகே குமராட்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

சிதம்பரம் அருகே குமராட்சி கே.ஆா்.ஜி. வளாகத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகளை ஒருமனதாகத் தோ்வு செய்ய கே.ஆா்.ஜி.தமிழ்வாணனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கௌரவத் தலைவராக வாசு, செயலராக செல்வம், துணைத் தலைவராக ஜாகீா் உசேன், பொருளாளராக கண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் விவசாய சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று திருச்சின்னபுரம் தென்கிளை கடைமடை பாசன வாய்க்காலைத் தூா்வாரி, சுத்தம் செய்த சிதம்பரம் தலைமைச் செயற்பொறியாளா் சாம்ராஜ், லால்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் ஞானசேகா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, மத்திய அரசால் வழங்கப்பட்ட 2017-2018 காப்பீட்டுத் தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோருவது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோருவது, லால்பேட்டை குமராட்சி வழியாக கான்சாகிப் வாய்க்கால் சென்றடையும் தூா்ந்து போன வடிகால் வாய்க்காலைத் தூா்வாரி சுத்தம் செய்து தர கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com