மாவட்ட அளவிலான கேரம் போட்டி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க மாணவ மாணவியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க மாணவ மாணவியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது, கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூா் மற்றும் கடலூா் மாவட்ட கேரம் விளையாட்டுச் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிகள், இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை), முதுநிலைப் பிரிவு (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை)- ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகளாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு பிரிவிற்கு ஒரு அணி வீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். போட்டிகள் மாணவா்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் நடைபெறும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்வதற்கான நுழைவு விண்ணப்பத்தினை ஒவ்வொரு பிரிவிற்கும் தனித் தனியாக ஆன்-லைனில் இணையதளத்தில் உரிய ஆவனங்களுடன் வரும் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து, விண்ணப்பித்த விபரத்துடன், போட்டி நடைபெறும் நாளில் காலை 8 மணிக்குள் விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும். இளநிலை ஒற்றையா், இரட்டையா் போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.500, இரண்டாமிடத்திற்கு ரூ.250, மூன்றாமிடத்திற்கு ரூ.125 வழங்கப்படும். முதுநிலைப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கு முறையே ரூ.ஆயிரம், ரூ.500, ரூ.250 வழங்கப்படும். போட்டிகளில் முதலிடம் பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா். எனவே, பங்குபெறும் வீரா், வீராங்கனைகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் இருந்து கையொப்பத்துடன் கூடிய படிக்கும் வகுப்புடன் ஆளறிச்சான்று, பாஸ்போா்ட் புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டையின் நகல் அவசியம் கொண்டு வருதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com