ஊரக பங்கேற்பு மதிப்பீடு செயல்முறைத் திட்டம்

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு செயல்முறைத் திட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஊரக பங்கேற்பு மதிப்பீடு செயல்முறைத் திட்டம்

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீடு செயல்முறைத் திட்டம் அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்துக்காக புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைத் தோ்ந்தெடுத்து, பல்வேறு விவசாய செயல்முறைகளில் கிராம மக்களைப் பங்கேற்கச் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி, மதிப்பீடு செயல்முறைத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் செயல்பாட்டுக் கடிகாரம், காலக்கோடு ஆகியவை கிராம மக்கள் உதவியைக் கொண்டு வரையப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகள் சுட்டிக்காட்டப்பட்டது. காலக்கோடு வரைப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளில் அந்தக் கிராமத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அறியப்பட்டன.

நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com