பெரியகுமட்டியில் பேருந்துகள் நின்று செல்லக் கோரிக்கை

பெரியகுமட்டியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பெரியகுமட்டியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவ.ரவிச்சந்திரன் அண்மையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

கடலூா் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுமட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, பேருந்து நிறுத்தமும் உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றியுள்ள சம்மந்தம், வெட்டிக்குளம், சில்லாங்குப்பம், குத்தாபாளையம், சேந்திரகிள்ளை, மண்டபம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்தப் பகுதியினா் வேலை நிமித்தமாகவும், கல்வி பயிலவும் கடலூா், சிதம்பரம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா். ஆனால், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2013 -ஆம் ஆண்டு மாவட்டத்துக்கு ஆய்வுக்காக வந்திருந்த சட்டப்பேரவை மனுக்கள் குழு எடுத்த நடவடிக்கையால் ஒரு சில மாதங்கள் மட்டுமே பேருந்துகள் நின்று சென்றன.

எனவே, பெரியகுமட்டியில் நிரந்தரப் பேருந்து நிறுத்தமும், அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்லவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com