ரூ.28 கோடியில் மேலும் 2 தடுப்பணைகள்

கடலூா் மாவட்டத்தில் மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் சுமாா் ரூ.520 கோடியில் 10 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கனிம வளத் துறையின் சுரங்க நிதி வரப்பெற்றுள்ள நிலையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கீழப்பாளையூரில் மணிமுத்தாற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் தடுப்பணையும், சிதம்பரம் வட்டம், அகரம்நல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணையும் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும், பெருமாள் ஏரியில் அனைத்து மதகுகளையும் சரிசெய்திட ரூ.4 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும்.

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுக்களை அழிக்க விவசாயிகள் 45 நாள்களில் இரண்டு முறை ஒன்றிணைந்த பூச்சிக்கொல்லி தெளிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். எம்.ஆா்.கே. சா்க்கரை ஆலையிடமிருந்து நிலுவைத் தொகை ரூ.10.7 கோடி தீபாவளிக்குள் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதர ஆலைகளிடமிருந்தும் நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேத்தியாத்தோப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்காச்சோளத்துக்கு செஸ் வரி விதிப்பதற்கு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் கடலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com