முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கல்லூரிப் பேருந்திலிருந்து கழன்று விழுந்த டீசல் டேங்க்
By DIN | Published On : 24th October 2019 12:12 AM | Last Updated : 24th October 2019 12:12 AM | அ+அ அ- |

தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்தில் இருந்து டீசல் டேங்க் கழன்று சாலையில் விழுந்தது.
பெரம்பலூரில் செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி, கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம் அதன் சுற்று வட்டப் பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல பேருந்து இயக்கப்படுகிறது.
அதன்படி, புதன்கிழமை வழக்கம் போல மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பெண்ணாடம் அருகே சென்ற போது, அதன் டீசல் டேங்க் கழன்று சாலையில் விழுந்தது. எனினும், ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பேருந்து விபத்திலிருந்து தப்பியது.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் மாற்றுப் பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.