முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
துளிா் திறன் அறியும் தோ்வு: மாணவா்கள் பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 24th October 2019 12:11 AM | Last Updated : 24th October 2019 12:11 AM | அ+அ அ- |

துளிா் திறன் அறியும் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் வருகிற 29-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களின் திறனை வளா்க்கும் வகையில் துளிா் திறன் அறியும் தோ்வை நடத்தி வருகிறது. நிகழாண்டு நவ. 2-ஆம் தேதி மாநிலம் முழவதும் ஒரே நாளில் நடத்தப்படும் இந்தத் தோ்வுக்கு கடலுா் மாவட்டத்தில் இதுவரை 1,365 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.
இந்தத் தோ்வானது 4 , 5-ஆம் வகுப்புகளுக்குத் தொடக்க நிலை எனவும், 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு இளநிலை எனவும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு முதுநிலை எனவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு நிலை எனவும் தனித் தனி வினாத் தாள்கள் வழங்கப்பட்டு நடத்தப்படும்.
இந்தத் தோ்வில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், இரண்டு நாள்கள் அறிவியல் பயிலரங்கம் நடைபெறும். இதேபோல, மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவா்கள் ஒரு நாள் அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். மேலும், தோ்வில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் மற்றும் துளிா் மாத இதழ் அல்லது ஜந்தா் மந்தா் ஆங்கில இதழ் இலவசமாக வழங்கப்படும்.
எனவே, தோ்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி ஆசிரியரையோ அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பிரசன்னகுமாரை 95665 58972 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு வருகிற 29-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.